Friday, January 8, 2010

ஜுகினி சாதம்


தேவையானவை :
அரிசி - 1கப்
சுக்கினி - 1
பச்சை மிளகாய் - 3
கடலை பருப்பு - 1 spoon
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
எலுமிச்சை -1/2மூடி
கருவேப்பிலை
செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும்
வாணலியில் கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு,கடலை பருப்பை சேர்க்கவும்.
பின் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
ஜுகினியை காரட் திருவியில் துருவிக்கொள்ளவும்.
இதை வானலியில் போட்டு வதக்கவும்.
நன்கு வெந்தவுடன் உப்பு போடவும்.
பின் இதில் சாதத்தை சேர்த்து கிளறவும்.
ஆரிய பின் அரை மூடி எலுமிச்சம்பழம் புளியவும்.
நன்கு கலந்து பரிமாறவும்.
சத்தான ஜுகினி சாதம் ரெடி

11 comments:

  1. மோகினி தெரியும். ஜூகினி? கோச்சுக்காம சொல்லுங்க ப்ளீஸ்...

    ReplyDelete
  2. சுக்கினி என்று போடுங்கள். கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதுஙக்ள். அப்படியே படத்தையும் சேருங்கள்.

    ReplyDelete
  3. www.tamileditor.org

    ithil poy type paNNungkaL.

    sukkini enRu

    ReplyDelete
  4. go>blogger>dashboard>settings>comments>word verification>no.

    ReplyDelete
  5. நன்றி அண்ணாமலையான்.

    ReplyDelete
  6. அண்ணாமலையான்,
    படம் பார்த்து சுக்கினியை தெரிந்து கொள்ள‌வும்.

    ReplyDelete
  7. சுக்கினி சாதம் ஈசியா இருக்கே .

    ReplyDelete
  8. சுக்கினி என்பது என்ன சொல்ல முடியுமா? படத்தை பார்த்தால் எனக்கு தெரியலை?

    ReplyDelete
  9. athu oru vegetable.cucumber maathiri irukkum.

    ReplyDelete