Friday, January 8, 2010

மைக்ரோவைவ் மைசூர்பாக் எளிய முறை


இது அவசரத்திற்கு தயார் செய்ய ஏற்றது.
எதிர்பாராமல் வரும் விருந்தினர்களை அசத்திடலாம்
தேவையானவை
கடலை மாவு - 1கப்
சக்கரை பொடித்தது - 2 கப்
நெய் - 1கப்
பால் -1 ஸ்பூன்

செய்முறை
கடலை மாவை பச்ச வாசனை போக வறுத்து கொள்ளவும்
இதில் நெய்யை கலந்து மைக்ரோவைவ் வில்1 நிமிடம்
வைக்கவும்.(மாவில் நெய் சேர்த்தவுடன் தோசை மாவு பதத்தில் இருக்கும்.
அப்படி இல்லை என்றால் இன்னும் நெய் சேர்க்கவும்.)
பின் இதில் பொடித்த சக்கரை கலக்கவும்.
இது புட்டு பதத்தில் இருக்கும்.
ரொம்ப உதிரியா இருந்தா சிறிது நெய் சேர்க்கவும்.
பின் இதை 2 நிமிடம் மைக்ரிவைவில் வைக்கவும்.
பின் நன்கு கலந்து 1ஸ்பூன் பால் சேர்க்கவும்.
பின் 1நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து பார்த்தால் நெய் வெளியே வந்திருக்கும்.
இதுதான் சரியான பதம்.
அப்படி இல்லை என்றால் சிறிது நெய் சேர்த்து மேலும்1 நிமிடம் வைக்கவும்
பின் வெளியே எடுத்து துண்டுகள் போடவும்

1 comment:

  1. ஓ இங்கயும் துண்டுதான் போடனுமா? (உங்களுக்கு கமெண்ட்டுகள் வேனும்னா word verification எடுத்து விட்டுருங்க)

    ReplyDelete