Thursday, January 7, 2010

மெந்தசார் - குழம்பு வகை

ஹாய் !
இது ஒரு புதிய குழம்பு வகை.
தேவையானவை :
புளி - பெரிய லெமன் அளவு
சின்ன வெங்காயம் - 15
கடலை பருப்பு - 1/4 கப்
milagai வத்தல் - 8
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
செய்முறை :
வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடலை பருப்பையும் மிளகாவையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.பின் அதை மிக்ஸ்யில் பொடிசெய்து கொள்ளவும்.வாணலியில் ஆயில் விட்டு கடுகு தாளிக்கவும்.பின் வெந்தயம் , பெருங்காயம்,கருவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் போடவும்.அது பொன்னிறமாக ஆனவுடன் புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் உப்பு போடவும்.பின் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்.கொதித்தவுடன் இறக்கவும்.
இது நல்ல காரமான குழம்பு.வடகத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.இது எனது இரண்டாவது பதிவு.உங்கள் கமெண்ட்ஸ் பொறுத்து தொடரும்.

2 comments:

  1. அபர்ணா நான் இன்று தான் இந்த ப்ளாக்கை பார்த்தே. நல்ல குறிப்பு. இதே போல் எங்க வீட்டிலும் செய்வார்கள்.

    நிங்க எங்க ப்ளாக் பக்கம் வந்து பாருங்க.

    ReplyDelete