Thursday, January 7, 2010

ஓட்ஸ் தோசை எளிய முறை

ஹாய்
இது எளிய முறை தோசை .
காலை நேர அவசரத்திற்கு ஏற்றது
சத்தானது.
தேவையானவை :
ஓட்ஸ் : 2 கப்
தயிர் : 2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
ஜீரகம் :1 ஸ்பூன்
பச்சைமிளகாய் : 2
அரிசி மாவு : 2 spoon
சோழ மாவு : 2 spoon
வெங்காயம் : பெரியது 1

செய்முறை :
ஓட்ச்சில் 2 கப் சூடான தண்ணீர் விட்டு 2 ஸ்பூன் தயிர் ,உப்பு சேர்த்து 15
நிமிடம் ஊற விடவும்.பின் இதில் ஜீரகம் ,பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.இதில் அரிசி மாவு மற்றும் சோழமாவையும் கலந்து கொள்ளவும் .
வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக்கொள்ளவும்.கருவேப்பிலை இருந்தால் சேர்த்துக்கொள்ளவும். பின் ரவா தோசை போல் மெல்லியதாக ஊற்றவும்.
உடம்பிற்கு ஏற்ற சத்தான டிபன் தயார்.

11 comments:

  1. தமிழ் பெண் வலைப்பதிவாளர்களை ஒரிடத்தில் சேர்க்கும் முயற்சி

    http://www.tamilpenkal.co.cc/

    உங்கள் நண்பர்கட்கும் அறிமுகம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. நல்லாருக்கு. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அதென்னங்க சோழ மாவு? இது வரை கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
  4. அட அதாங்க தஞ்சாவூர்ல அறைச்சிருப்பாங்க?!

    ReplyDelete
  5. thanks for sharing, could you please write on social, physcological isues lik NRI;s life, nri kids difficulties, sresses etc

    ReplyDelete
  6. sure Mr.kuppan.
    i have planned to write on nri kids.

    wish u happy pongal.
    ennanga panrathu.nanum corn flour ra tamil la type panna romba try panninaen.
    "la" varavae illa.
    "sha" varaathu, "la" varaathu.peru mattum subramanian bharathi.(short name suppi sir)

    ReplyDelete
  7. சரி சரி அழாதீங்க...(ஆமா i have planned to write on nri kids. ஏன் இப்டி? உங்கள பாத்து ஒரு கேள்வி?)

    ReplyDelete
  8. ஓட்ஸ் தோசை நல்லடயட்டுக்கு ஏற்றது.நேரம் கிடைத்தால் என் ஓட்ஸ் தோசையையும் வந்து ருசி பாருங்கள்

    ReplyDelete
  9. அண்ணாமலையான் உங்களுக்கு சோழமாவு கிடைக்கலேன்னா பாண்டியமாவு....சேரமாவு எதுவேணும்னாலும் சேர்த்துக்கலாம்

    ReplyDelete