Friday, January 8, 2010

பால் அல்வா எளியமுறை

பொதுவா ஸ்வீட் செய்வது கஷ்டம் என்பார்கள்.
யார்வேணா செய்யக்கூடிய எளியமுறை அல்வா இது.

தேவையானவை :
பால் - 2 கப்
சக்கரை - 1 கப்
நெய் -1/2 கப்
ரவை -1/4 cup
ஏலக்காய் - 2
கேசரி பவுடர் - சிறிது

செய்முறை:
பால்,சக்கரை,நெய்,ரவை இவை நான்கையும் கலந்து ஒரு அடி கனமான வாணலியில் வைத்து மீடியம் அடுப்பில் கிளறவும்.கொஞ்சம் இறுக ஆரம்பித்தவுடன் கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.தேவைப்பட்டால் இன்னும் நெய் சேர்க்கவும்.நெய் வெளியே வர ஆரம்பித்தவுடன் அல்வா பதம் சரி என்று அர்த்தம்.
அடுப்பை அணைத்துவிட்டு துண்டுகள் போடவும்.

3 comments:

  1. unga vaiththa poruththu thunduthan podanum illa. vettiyae podalam.word verification remove panna help pls.

    ReplyDelete
  2. துண்டு எதுக்குங்க போடணும்.ரிசர்வ் பண்ணவா..
    துண்டு போடுற மாதிரி பதம் வந்தா அது பர்ஃபிதானுங்களே?

    ReplyDelete